Friday, 1 June 2012

மலை வேம்பு

மலை வேம்பு:
மலை வேம்பு (தாவரவியல் பெயர்: Melia composita willd. மிலியேசியே Meliaceaeக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது 20-25 அடி உயரம் வரை உயர்ந்து மரமாக வளரக்கூடியது.

தாவரவியல் பண்புகள்:
மலை வேம்பு குறுகிய காலத்தில் மற்ற மரங்களைவிட அதிக வருமானம் தரக்கூடியது.குறைந்த நீரிலும் நன்றாக வளரும்.வடிகால் வசதி கொண்ட நிலங்களிலும்,மணல் கலந்த வண்டல் மண்ணிலும் நன்றாக வளரும். 

வகைகள்:
மலைவேம்பில் 2 வகை உள்ளது. 
மீலியா டூபியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மலைவேம்பு பயிர் செய்ய ஏற்றது. 


துலுக்க வேம்பு என்று அழைக்கப்படும் இன்னொருவகை வேம்பு நிறைய கிளைகளுடன் தரமற்ற மரமாக வளரக் கூடியது. இது பயிர் செய்த சில மாதங்கள் கழித்தே தெரியவரும்.

காலநிலை மற்றும் மண்:
பசுமைமாறாக்காடுகளாகக் காணப்படும் மலை வேம்பு வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களுக்கும் ஏற்றது.குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

உழவு:
நிலத்தை நன்கு உழவு செய்து 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் 2 அடி நீளம்,அகலம், ஆழம் உள்ள குழிகளை தோண்டி நடவு செய்ய வேண்டும்.

உரம்:
நடவுக்கு முன் மண்புழு உரம், தொழு உரம் தல ஒரு கிலோ ,அசோஷ்பைரில்லம் 15 கிராம் வேம் 30 கிராம் போட்டு மண் கட்டி உடையாமல் பையிலுள்ள கன்றுகளை நடவேண்டும்.

ஒரு நாற்று ஏழு ரூபாய்:
தனியார் நாற்றுப் பண்ணைகளில் ஒரு மலைவேம்பு கன்றை 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள்.

 குளோனிங் முறையில் உற்பத்தி செய்யும் கன்றுகளை 7 ரூபாய்க்கு விற்பனை 
செய்கிறார்கள்

நடவு:
மானாவாரியாக ஏக்கருக்கு 200 கன்றுகள் வேண்டும்.
 அல்லது ஒரு ஏக்கரில் 12 க்கு 12 அடி வீதம் 360 செடிகளை நடலாம்


மலைப்பகுதிகளில் நீரோட்டம் இருக்கும் இடங்களில் மட்டுமே மலைவேம்பு வளர்ந்து நிற்கிறது. எனவே இதற்கு நீர்ப்பாசனம் அவசியம். கன்று நடவு செய்தபிறகு முதல்3 ஆண்டுகளுக்கு வாரம் ஒரு முறை கட்டாயம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். எனவே தண்ணீர் பாசன வசதி இல்லாத இடங்களில் சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும். மீறிச்செய்தால் பொருளாதார ரீதியாகப் பலன் கிடைக்காது. அதே சமயம் நீர் தேங்கி நிற்கும் களிமண் நிலத்தில் சாகுபடி செய்தாலும் கன்றுகள் அழுகிவிடும். எனவே வடிகால் வசதியுள்ள நிலமாக இருக்க வேண்டும்.



மலைவேம்புக்கு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்:
வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுத்தால் போதும்

களை:
முதல் 2 ஆண்டுகள் களை எடுத்தால் போதும்.அதை மழைக்கு முன்னர் செய்ய வேண்டும்.

மலை வேம்பு மரத்தின் பொருளாதார பயன்:
மூன்றாம் ஆண்டில் காகித ஆலைக்கும், 4 ஆம் ஆண்டில் தீக்குச்சி ஆலைக்கும் 5 , 6 ஆம் ஆண்டில் பிளைவுட் கம்பனிக்கும் விற்பனை செய்யலாம். 7 ஆம் ஆண்டுக்கு மேல் மர சாமான்கள் செய்யவும் பயன்படுத்தலாம்.  

மலைவேம்பில் ஊடுபயிர்:
ஊடு பயிர்கள் மஞ்சள்,வாழை, உளுந்து, காய்கறிகள் பயிரிடலாம். 
ஓராண்டுக்கு பின்னர் மிளகு கொடிகளை நடலாம்

வருமானம்:
7 ஆண்டுக்கு பின் விற்பனை மூலம்ஏக்கருக்கு5-7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்

தகவல்கள் பெற:
மலைவேம்புக் கன்றுகள் குறித்தத் தகவல்கள் தேவைப்படுவோர், புகளூர் காகித ஆலை நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர். சின்னராஜ் மற்றும் முனைவர்.செழியன் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்''






கருவேல மரம்






1 comment:

  1. MR,CHINNARAJ & MR.CHZHLIAN CELL NO PLEASE MY CELLNO 9894738233

    ReplyDelete